புதிய இலங்கை சுதந்திரக் கட்சி என்ற புதிய கட்சியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதற்கான நிகழ்வு கொழும்பில் இன்று காலை நடைபெற்றிருக்கிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை குமார வெல்கம செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதே தமது நோக்கம் என்று கட்சியை தொடங்கிவிட்டுப் பேசிய அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்ட பல்வேறு கட்சிகள் தம்முடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைவரையும் இந்தக் கட்சியில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்த குமார வெல்கம, தேர்தலில் போட்டியிடக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.
மொட்டுக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்த சுதந்திரக் கட்சியாளர்கiளை தனது கட்சியில் இணைப்பதே நோக்கம் என்று குறிப்பிட்டிருக்கும் குமார வெல்கம, சேறுபூசுவது தமது கட்சியினருக்கு தடை என்றும் கூறினார்.

Lanka Newsweek © 2026